×

இன்கம் டாக்ஸ் வழக்கு: ஜன. 27-ல் சசிகலா விடுதலையாக வாய்ப்பு…ஐகோர்ட்டில் சசி தரப்பு வழக்கறிஞர் தகவல்.!!!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, சசிகலா எப்போது விடுதலை  செய்யப்படுவார் என்று பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த சிறைத் துறை நிர்வாகம், சசிகலா 2021-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி  விடுதலையாகிறார். சசிகலா நன்னடத்தை விதிகளின் கீழ் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை. அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தியே ஆக வேண்டும். சசிகலாவின் பரோல் காலத்தைக் கணக்கிட்டு விடுதலை தேதி மாறும். தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை  செய்யப்படுவார் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும்,சசிகலாவிற்கு வழக்கில் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் ஓராண்டுகள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று  தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. எனவே அபராதத்தை செலுத்தத் தவறினால், 2022-ம் தேதி ஜனவரியில்தான் சசிகலா விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது. சசிகலா விடுதலையாக உள்ளதால் வழக்கு பற்றி அவரிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க அவகாசம் தேவை என்று வாதாடினார். தொடர்ந்து, வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்ததை வைத்து பார்க்கும்போது, வரும் ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாக அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும், அபராத தொகையான ரூ.10 கோடியை சசிகலா தரப்பு செலுத்திவிட்டதாக கருதப்படுகிறது.  தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சசிகலா விடுதலை முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. …

The post இன்கம் டாக்ஸ் வழக்கு: ஜன. 27-ல் சசிகலா விடுதலையாக வாய்ப்பு…ஐகோர்ட்டில் சசி தரப்பு வழக்கறிஞர் தகவல்.!!! appeared first on Dinakaran.

Tags : Jan ,Sasikala ,Sasi ,Chennai ,Bengaluru Parappana Agrahara Jail ,Dinakaran ,
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...